குறள்: 594 60. ஊக்கம் உடைமை
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலாஊக்க முடையா னுழை
மு. வரதராசனார் உரை
சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழிக் கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்.
சாலமன் பாப்பையா உரை
தளராத ஊக்கம் உள்ளவனிடம், செல்வமானது தானே அவன் முகவரியை அறிந்து செல்லும்.
மு. கருணாநிதி உரை
உயர்வு, உறுதியான ஊக்கமுடையவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் போய்ச் சேரும்