குறள்: 598 60. ஊக்கம் உடைமை
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்துவள்ளியம் என்னுஞ் செருக்கு
மு. வரதராசனார் உரை
ஊக்கம் இல்லாதவர் இவ்வுலகில் யாம் வண்மை உடையேம் என்றுத் தம்மைத் தான் எண்ணி மகிழும் மகிழ்ச்சியை அடையமாடடார்.
சாலமன் பாப்பையா உரை
ஊக்கம் இல்லாதவர் பிறர்க்கு உதவும் வள்ளல் யாம் என்னும் மன உயர்வைப் பெறமாட்டார்.
மு. கருணாநிதி உரை
அள்ளி வழங்கும் ஆர்வம் இல்லாத ஒருவர் தம்மை வள்ளல் எனப் பெருமைப்பட்டுக் கொள்ள வழியே இல்லை