குறள்: 600 60. ஊக்கம் உடைமை

பொருட்பால்அரசியல்

உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார்மரமக்க ளாதலே வேறு

மு. வரதராசனார் உரை

ஒருவனுக்கு வலிமையானது ஊக்க மிகுதியே, அவ்வூக்கம் இல்லாதவர் மரங்களே, (வடிவால்) மக்களைப் போல் இருத்தலே வேறுபாடு.

சாலமன் பாப்பையா உரை

ஊக்க மிகுதியே ஒருவனுக்குத் திண்ணிய அறிவு. அவ்வூக்கம் இல்லாதவர் வடிவத்தால் மக்கள்; மனத்தாலோ வெறும் மரமே.

மு. கருணாநிதி உரை

மனத்தில் உறுதியான ஊக்கமில்லாதவர்கள் உருவத்தில் மனிதர்களாகக் காணப்பட்டாலும் மரங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இல்லை

ஊக்கம் உடைமை அதிகாரம் முழுவதும்