குறள்: 605 61. மடி இன்மை

பொருட்பால்அரசியல்

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்கெடுநீரார் காமக் கலன்

மு. வரதராசனார் உரை

காலம் நீட்டித்தல், சோம்பல், மறதி, அளவு மீறியத் தூக்கம் ஆகிய இந் நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம்.

சாலமன் பாப்பையா உரை

காலம் தாழ்த்தி செய்வது, மறதி, சோம்பல், ஓயாத் தூக்கம் இவை நான்கும் அழிவை நாடுவார் விரும்பி ஏறும் சிறு படகாகும்.

மு. கருணாநிதி உரை

காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பியேறும் தோணிகளாம்!

மடி இன்மை அதிகாரம் முழுவதும்