குறள்: 606 61. மடி இன்மை

பொருட்பால்அரசியல்

படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்மாண்பயன் எய்தல் அரிது

மு. வரதராசனார் உரை

நாட்டை ஆளும் தலைவருடைய உறவுத் தானே வந்து சேர்ந்தாலும், சோம்பல் உடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.

சாலமன் பாப்பையா உரை

நிலம் முழுவதும் ஆண்ட மன்னர்களின் செல்வம் எல்லாம் சேர்ந்திருந்தாலும், சோம்பலை உடையவர் நல்ல பயனை அடைவது அரிது.

மு. கருணாநிதி உரை

தகுதியுடையவரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருப்பினும் சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவதென்பது அரிதாகும்

மடி இன்மை அதிகாரம் முழுவதும்