குறள்: 61 7. மக்கட்பேறு

அறத்துப்பால்இல்லறவியல்

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்தமக்கட்பே றல்ல பிற

மு. வரதராசனார் உரை

பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம் மதிப்பதில்லை.

சாலமன் பாப்பையா உரை

அறியவேண்டுவனவற்றை அறியும் அறிவு படைத்த பிள்ளைச் செல்வத்தைத் தவிர மற்றவற்றை ஒருவன் பெறும் நன்மையாக நான் எண்ணுவதில்லை.

மு. கருணாநிதி உரை

அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை

மக்கட்பேறு அதிகாரம் முழுவதும்