குறள்: 647 65. சொல்வன்மை

பொருட்பால்அமைச்சியல்

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சா னவனைஇகல்வெல்லல் யார்க்கும் அரிது

மு. வரதராசனார் உரை

தான் கருதியவற்றை நன்கு சொல்ல வல்லவனாய் சொல்லும் போது சோர்வு இல்லாதவனாய், அஞ்சாதவனாய் உள்ளவனை மாறுபாட்டால் வெல்வது யார்க்கும் முடியாது.

சாலமன் பாப்பையா உரை

தான் எண்ணியதைப் பிறர் ஏற்கச் சொல்லும் ஆற்றல் உள்ளவன், சொல்லும் செய்தி கடினமானது என்றாலும் சோர்வு இல்லாதவன், கேட்பவர் பகையாளர் என்றாலும் அஞ்சாதவன் இவன்மீது பகைகொண்டு வெல்வது எவர்க்கும் கடினமே.

மு. கருணாநிதி உரை

சொல்லாற்றல் படைத்தவனாகவும், சோர்வு அறியாதவனாகவும், அஞ்சா நெஞ்சங் கொண்டவனாகவும் இருப்பவனை எதிர்த்து எவராலும் வெல்ல முடியாது

சொல்வன்மை அதிகாரம் முழுவதும்