குறள்: 648 65. சொல்வன்மை

பொருட்பால்அமைச்சியல்

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிதுசொல்லுதல் வல்லார்ப் பெறின்

மு. வரதராசனார் உரை

கருத்துக்களை ஒழுங்காகக் கோர்த்து இனியாக சொல்ல வல்லவரைப் பெற்றால், உலகம் விரைந்து அவருடைய ஏவலைக் கேட்டு நடக்கும்.

சாலமன் பாப்பையா உரை

சொல்லும் செய்திகளை வரிசைபடக் கோத்து இனிதாகச் சொல்லும் ஆற்றலை உடையவர் என்றால், அவர் சொல்வனவற்றை உலகம் விரைந்து ஏற்றுக் கொள்ளும்.

மு. கருணாநிதி உரை

வகைப்படுத்தியும், சுவையாகவும் கருத்துக்களைச் சொல்லும் வல்லமையுடையோர் சுட்டிக்காட்டும் பணியை, உலகத்தார் உடனடியாக நிறைவேற்ற முனைவார்கள்

சொல்வன்மை அதிகாரம் முழுவதும்