குறள்: 649 65. சொல்வன்மை

பொருட்பால்அமைச்சியல்

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்றசிலசொல்லல் தேற்றா தவர்

மு. வரதராசனார் உரை

குற்றமற்றவையாகியச் சில சொற்களைச் சொல்லத் தெரியாதவர், உண்மையாகவே பலச் சொற்களைச் சொல்லிக்கொண்டிருக்க விரும்புவர்.

சாலமன் பாப்பையா உரை

குற்றமற்ற சில சொற்களால் சொல்லும் ஆற்றல் இல்லாதவர், பலபல சொற்களைப் பேச விரும்புவர்.

மு. கருணாநிதி உரை

குறையில்லாத சில சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கம் தந்திட இயலாதவர்கள்தான் பல சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பார்கள்

சொல்வன்மை அதிகாரம் முழுவதும்