குறள்: 65 7. மக்கட்பேறு
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்சொற்கேட்டல் இன்பம் செவிக்கு
மு. வரதராசனார் உரை
மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும்.
சாலமன் பாப்பையா உரை
பெற்ற பிள்ளைகளின் உடலைத் தழுவுவது உடலுக்கு இன்பம். அவர்களின் பேச்சைக் கேட்பது காதிற்கு இன்பம்
மு. கருணாநிதி உரை
தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும்