குறள்: 661 67. வினைத்திட்பம்
வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்மற்றைய எல்லாம் பிற
மு. வரதராசனார் உரை
ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனதின் திட்பமே (உறுதியே) ஆகும், மற்றவை எல்லாம் வேறானவை.
சாலமன் பாப்பையா உரை
ஒரு செயலை இடையில் விடாது செய்து முடிப்பதற்கான செயல் உறுதி என்பது ஒருவனின் மன உறுதியே. மற்றவை உறுதி எனப்படமாட்டா.
மு. கருணாநிதி உரை
மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால் அவரது செயலிலும் உறுதி இருக்காது