67. வினைத்திட்பம்

'வினைத்திட்பம்' என்ற தலைப்பில் வினை முடித்தற்கான செயலுறுதி பேசப்படுகிறது. முறையாக ஆராய்ந்து தேர்ந்தெடுத்த தொழிலை, பின் வாங்காது திண்ணமாய் முன்னின்று முயன்று, முற்ற முடித்தலுக்கு வினைத்திட்பம் வேண்டும். மனத்திட்பம்தான் வினைத்திட்பம். அதாவது வினையின்திட்பம் விளங்குவது செய்வானுடைய உள்ளத்தைப் பொறுத்தது. வினைத்திட்பம் இருந்தால் எண்ணிய பொருளை எண்ணியபடி எய்த இயலும்.