குறள்: 668 67. வினைத்திட்பம்

பொருட்பால்அமைச்சியல்

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காதுதூக்கங் கடிந்து செயல்

மு. வரதராசனார் உரை

மனம் தளராமல் ஆராய்ந்து துணிந்து ஏற்றத் தொழிலைச் சோர்வு கொள்ளாமல் காலந் தாழ்த்தாமல் செய்து முடிக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

மனம் தெளிந்து செய்யத் துணிந்த செயலைத் தடுமாறாமல் தாமதிக்காமல் செய்க.

மு. கருணாநிதி உரை

மனக் குழப்பமின்றித் தெளிவாக முடிவு செய்யப்பட்ட ஒரு செயலைத் தளர்ச்சியும், தாமதமும் இடையே ஏற்படாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும்

வினைத்திட்பம் அதிகாரம் முழுவதும்