குறள்: 663 67. வினைத்திட்பம்

பொருட்பால்அமைச்சியல்

கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்எற்றா விழுமந் தரும்

மு. வரதராசனார் உரை

செய்யும் செயலை முடிவில் வெளிப்படும் படியாக செய்யும் தகுதியே ஆண்மையாகும், இடையில் வெளிபட்டால் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை

ஒரு செயலை முடிவில் வெளிப்படுத்துவதே ஆளுமை, இடையிலேயே வெளிப்படுத்தினால் அது செயலைச் செய்பவனுக்கு நீங்காத துன்பத்தைத் தரும்.

மு. கருணாநிதி உரை

செய்து முடிக்கும் வரையில் ஒரு செயலைப்பற்றி வெளிப்படுத்தாமலிருப்பதே செயலாற்றும் உறுதி எனப்படும் இடையில் வெளியே தெரிந்துவிட்டால் அச்செயலை நிறைவேற்ற முடியாத அளவுக்கு இடையூறு ஏற்படக்கூடும்

வினைத்திட்பம் அதிகாரம் முழுவதும்