குறள்: 671 68. வினை செயல்வகை
மு. வரதராசனார் உரை
ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்வதே ஆகும், அவ்வாறு கொண்ட துணிவு காலந் தாழ்த்து நிற்பது குற்றமாகும்.
வினை செயல்வகை என்பது செயல் ஆற்றும் திறம் கூறுவது . ஆதாரங்கள், வழிமுறைகள், பொருத்தமான காலம், ஏற்றஇடம், செயல்தன்மை இவற்றைப் பார்த்துசெயல் புரிக என அறிவுறுத்தப்படுகிறது. எல்லாவகையான செயல்களுக்கும் பொருந்தும்வகையில் பாக்கள் அமைந்திருந்தாலும், போர், பகைநீக்கல் தொடர்பான செயல்கள் பற்றியன இவ்வதிகாரத்தில் மேலோங்கித் தெரிகின்றன.
குறள்: 671 68. வினை செயல்வகை
ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்வதே ஆகும், அவ்வாறு கொண்ட துணிவு காலந் தாழ்த்து நிற்பது குற்றமாகும்.
குறள்: 672 68. வினை செயல்வகை
காலந்தாழ்த்தி செய்யத் தக்கவற்றைக் காலந்தாழ்ந்தே செய்ய வேண்டும், காலந்தாழ்த்தாமல் விரைந்து செய்யவேண்டிய செயல்களைச் செய்ய காலந்தாழ்த்தக் கூடாது.
குறள்: 673 68. வினை செயல்வகை
இயலுமிடத்தில் எல்லாம் செயலைச் செய்து முடித்தல் நல்லது, இயலாவில்லையானால் பயன்படும் இடம் நோக்கியாவது செய்ய வேண்டும்.
குறள்: 674 68. வினை செயல்வகை
செய்யத்தொடங்கியச் செயல், கொண்ட பகை என்று இவ்விரண்டின் குறை ஆராய்ந்து பார்த்தால், தீயின் குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும்.
குறள்: 675 68. வினை செயல்வகை
வேண்டிய பொருள், ஏற்றக்கருவி, தக்க காலம், மேற்கொண்ட தொழில், உரிய இடம் ஆகிய ஐந்தினையும் மயக்கம் தீர எண்ணிச் செய்ய வேண்டும்.
குறள்: 676 68. வினை செயல்வகை
செயலை முடிக்கும் வகையும், வரக்கூடிய இடையூறும், முடிந்த போது கிடைக்கும் பெரும்பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து செய்ய வேண்டும்.
குறள்: 677 68. வினை செயல்வகை
செயலைச் செய்கின்றவன் செய்ய வேண்டிய முறை, அச் செயலின் உண்மையான இயல்பை அறிந்தவனுடையக் கருத்தைத் தான் ஏற்றுக் கொள்ளவதாகும்
குறள்: 678 68. வினை செயல்வகை
ஒரு செயலைச் செய்யும் போது அச் செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக் கொள்ளல், ஒரு யானையால் மற்றொரு யானையைப் பிடித்தலைப் போன்றது.
குறள்: 679 68. வினை செயல்வகை
பகைவராக உள்ளவரைப் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளல், நண்பர்க்கு உதவியானவற்றை செய்தலைவிட விரைந்து செய்யத்தக்கதாகும்.
குறள்: 680 68. வினை செயல்வகை
வலிமை குறைந்தவர், தம்மை சார்ந்துள்ளவர் நடுங்குவதற்காக தாம் அஞ்சி, வேண்டியது கிடைக்ககுமானால் வலிமைமிக்கவரைப் பணிந்தும் ஏற்றுக் கொள்வர்.