குறள்: 677 68. வினை செயல்வகை

பொருட்பால்அமைச்சியல்

செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினைஉள்ளறிவான் உள்ளங் கொளல்

மு. வரதராசனார் உரை

செயலைச் செய்கின்றவன் செய்ய வேண்டிய முறை, அச் செயலின் உண்மையான இயல்பை அறிந்தவனுடையக் கருத்தைத் தான் ஏற்றுக் கொள்ளவதாகும்

சாலமன் பாப்பையா உரை

ஒரு செயலைச் செய்யத் தொடங்குபவன் அதைச் செய்யும் முறையாவது, அச்செயலை இதற்கு முன்பு செய்திருப்பவனின் கருத்தை அறிந்து கொள்வதேயாகும்.

மு. கருணாநிதி உரை

ஒரு செயலில் ஈடுபடுகிறவன், அச்செயல் குறித்து முழுமையாக உணர்ந்தவனின் கருத்தினை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்

வினை செயல்வகை அதிகாரம் முழுவதும்