குறள்: 670 67. வினைத்திட்பம்
எனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம்வேண்டாரை வேண்டா துலகு
மு. வரதராசனார் உரை
வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும், செய்யும் தொழிலில் உறுதி இல்லாதவரை உலகம் விரும்பிப் போற்றாது.
சாலமன் பாப்பையா உரை
எத்தனை வகை உறுதி உடையவராக இருந்தாலும் செயல் உறுதி இல்லாதவரை உயர்ந்தோர் மதிக்கமாட்டார்.
மு. கருணாநிதி உரை
எவ்வளவுதான் வலிமையுடையவராக இருப்பினும் அவர் மேற்கொள்ளும் செயலில் உறுதியில்லாதவராக இருந்தால், அவரை உலகம் மதிக்காது