குறள்: 682 69. தூது

பொருட்பால்அமைச்சியல்

அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கின்றி யமையாத மூன்று

மு. வரதராசனார் உரை

அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல் வன்மை ஆகிய இவை மூன்றும் தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்.

சாலமன் பாப்பையா உரை

அன்பு நாட்டிற்கு நல்லது அறியும் அறிவு, அடுத்தவரிடம் பேசும்போது தேர்ந்து எண்ணிச் சொல்லும் சொல்லாற்றல் இவை மூன்றும் தூதர்க்கு இன்றியமையாதன.

மு. கருணாநிதி உரை

தூது செல்பவருக்குத் தேவைப்படும் மூன்று முக்கியமான பண்புகள் அன்பு, அறிவு, ஆராய்ந்து பேசும் சொல்வன்மை

தூது அதிகாரம் முழுவதும்