குறள்: 694 70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

பொருட்பால்அமைச்சியல்

செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்ஆன்ற பெரியா ரகத்து

மு. வரதராசனார் உரை

வல்லமை அமைந்த பெரியாரிடத்தில் (மற்றொருவன்) செவியை நெருங்கிச் சொல்லுதல் உடன் சேர்ந்து நகைத்தலும் செய்யாமல் ஒழுகவேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

மேன்மை மிக்க பெரியவர் அருகே இருக்கும்போது, பிறருடன் காதருகே மெல்லப் பேசுவதையும் அடுத்தவர் முகம் பார்த்துக் கண்சிமிட்டிச் சிரிப்பதையும் செய்யாது நடந்துகொள்க.

மு. கருணாநிதி உரை

ஆற்றல் வாய்ந்த பெரியவர்கள் முன்னே, மற்றவர்கள் காதுக்குள் பேசுவதையும், அவர்களுடன் சேர்ந்து சிரிப்பதையும் தவிர்த்து, அடக்கமெனும் பண்பைக் காத்திடல் வேண்டும்

மன்னரைச் சேர்ந்து ஒழுகல் அதிகாரம் முழுவதும்