குறள்: 695 70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

பொருட்பால்அமைச்சியல்

எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளைவிட்டக்காற் கேட்க மறை

மு. வரதராசனார் உரை

(அரசர் மறைபொருள் பேசும் போது) எப்பொருளையும் உற்றுக் கேட்காமல் தொடர்ந்து வினவாமல் அப்பொருளை அவரே விட்டுச் சொன்னபோது கேட்டறிய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

ஆட்சியாளர் பிறருடன் ரகசியம் பேசம்போது காதுகொடுத்துக் கேட்காதே; என்ன பேச்சு என்று நீயாகக் கேளாதே; அதைப் பற்றி ஆட்சியாளரே சொன்னால் கேட்டுக் கொள்க.

மு. கருணாநிதி உரை

பிறருடன் மறைவாகப் பேசிக் கொண்டிருக்கும்போது அதை ஒட்டுக் கேட்கவும் கூடாது; அது என்னவென்று வினவிடவும் கூடாது அவர்களே அதுபற்றிச் சொன்னால் மட்டுமே கேட்டுக்கொள்ள வேண்டும்

மன்னரைச் சேர்ந்து ஒழுகல் அதிகாரம் முழுவதும்