குறள்: 704 71. குறிப்பறிதல்

பொருட்பால்அமைச்சியல்

குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனைஉறுப்போ ரனையரால் வேறு

மு. வரதராசனார் உரை

ஒருவன் மனதில் கருதியதை அவன் கூறாமலே அறிந்து கொள்ள வல்லவரோடு மற்றவர் உறுப்பால் ஒத்தவராக இருந்தாலும் அறிவால் வேறுபட்டவர் ஆவார்.

சாலமன் பாப்பையா உரை

ஒருவன் மனத்துள் நினைப்பதை அவன் சொல்லாமலேயே அறியம் ஆற்றல் உடையவரோடு அந்த ஆற்றல் இல்லாதவர் உறுப்பால் ஒத்தவர்; அறிவால் வேறுபட்டவர் ஆவார்.

மு. கருணாநிதி உரை

உறுப்புகளால் வேறுபடாத தோற்றமுடையவராக இருப்பினும், ஒருவர் மனத்தில் உள்ளதை, அவர் கூறாமலே உணரக்கூடியவரும், உணர முடியாதவரும் அறிவினால் வேறுபட்டவர்களேயாவார்கள்

குறிப்பறிதல் அதிகாரம் முழுவதும்