குறள்: 701 71. குறிப்பறிதல்
மு. வரதராசனார் உரை
ஓருவர் சொல்லாமலே அவறுடைய முகத்தை நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிகின்றவன் எப்போதும் உலகத்திற்க்கு ஓர் அணிகலன் ஆவான்.
குறிப்பறிதல் என்பது பிறர் உள்ளத்துள் எண்ணுவதை அவர் சொல்லாமலேயே அதாவது அவருடைய மனக் குறிப்பை அறிந்து நடக்கக்கூடிய திறமையாம். ஆட்சித் திறத்தில் தலைவனைச் சேர்ந்தொழுகுவார்க்கு இது இன்றியமையாததாகக் கருதப்படுவதால், அமைச்சர் தலைவன் குறிப்பறிந்து செயல்படவேண்டும் என்றும் தலைவனும் அமைச்சர், குடிகள் குறிப்பு உணர்ந்து செயல்படவேண்டும் என்றும் சொல்வதாக அமைகிறது இவ்வதிகாரம். குறிப்பறி கருவிகளாக முகமும் கண்ணும் சிறப்பித்துச் சொல்லப்படுகின்றன. இவற்றை நோக்கியே ஒருவரது அகக்குறிப்பை அறிந்துகொள்ளலாம் எனக் கூறப்படுகின்றது.
குறள்: 701 71. குறிப்பறிதல்
ஓருவர் சொல்லாமலே அவறுடைய முகத்தை நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிகின்றவன் எப்போதும் உலகத்திற்க்கு ஓர் அணிகலன் ஆவான்.
குறள்: 702 71. குறிப்பறிதல்
ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணரவல்லவனை (அவன் மனிதனே ஆனாலும்) தெய்வத் தோடு ஒப்பாக கொள்ள வேண்டும்.
குறள்: 703 71. குறிப்பறிதல்
(முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ள குறிப்பை உணர வல்லவரை நாட்டின் உறுப்புக்களுள் எதைக் கொடுத்தாவது துணையாக பெற்றுக்கொள்ள வேண்டும்.
குறள்: 704 71. குறிப்பறிதல்
ஒருவன் மனதில் கருதியதை அவன் கூறாமலே அறிந்து கொள்ள வல்லவரோடு மற்றவர் உறுப்பால் ஒத்தவராக இருந்தாலும் அறிவால் வேறுபட்டவர் ஆவார்.
குறள்: 705 71. குறிப்பறிதல்
(முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ளக்குறிப்பை உணராவிட்டால், ஒருவனுடைய உறுப்புகளுள் கண்கள் என்னப் பயன்படும்.
குறள்: 706 71. குறிப்பறிதல்
தன்னை அடுத்தப் பொருளைத் தன்னிடம் காட்டும் பளிங்கு போல், ஒருவனுடைய நெஞ்சில் மிகுந்துள்ளதை அவனுடைய முகம் காட்டும்.
குறள்: 707 71. குறிப்பறிதல்
ஒருவன் விருப்பம் கொண்டாலும், வெறுப்புக் கொண்டாலும் அவனுடைய முகம் முற்ப்பட்டு அதைத் தெரிவிக்கும், அம் முகத்தைவிட அறிவு மிக்கது உண்டோ.
குறள்: 708 71. குறிப்பறிதல்
உள்ளக் குறிப்பை நோக்கி உற்றதை உணரவல்லவரைப் பெற்றால், (அவரிடம் எதையும் கூறாமல்) அவறுடைய முகத்தை நோக்கி நின்றால் போதும்.
குறள்: 709 71. குறிப்பறிதல்
கண்பார்வையின் வேறுபாடுகளை உணரவல்லவரைப் பெற்றால்( ஒருவனுடைய மனதில் உள்ள) கையையும் நட்பையும் அவனுடைய கண்களே சொல்லி விடும்.
குறள்: 710 71. குறிப்பறிதல்
யாம் நுட்பமான அறிவுடையேம் என்று பிறர் கருத்தை அறிபவரின் அளக்குங்கோல், ஆராய்ந்து பார்த்தால் அவனுடையக் கண்களே அல்லாமல் வேறு இல்லை.