குறள்: 708 71. குறிப்பறிதல்

பொருட்பால்அமைச்சியல்

முகநோக்கி நிற்க அமையும் அகநோக்கிஉற்ற துணர்வார்ப் பெறின்

மு. வரதராசனார் உரை

உள்ளக் குறிப்பை நோக்கி உற்றதை உணரவல்லவரைப் பெற்றால், (அவரிடம் எதையும் கூறாமல்) அவறுடைய முகத்தை நோக்கி நின்றால் போதும்.

சாலமன் பாப்பையா உரை

தன் மனத்தைக் குறிப்பால் அறிந்து தான் எண்ணியதை அறிபவரைத் துணையாகப் பெற்றால், அவர்களின் முகத்தை அவன் பார்த்து நின்றாலே போதும்.

மு. கருணாநிதி உரை

அகத்தில் உள்ளதை உணர்ந்து கொள்ளும் திறமையிருப்பின், அவர் ஒருவரின் முகத்துக்கு எதிரில் நின்றாலே போதுமானது

குறிப்பறிதல் அதிகாரம் முழுவதும்