குறள்: 707 71. குறிப்பறிதல்

பொருட்பால்அமைச்சியல்

முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும்காயினும் தான்முந் துறும்

மு. வரதராசனார் உரை

ஒருவன் விருப்பம் கொண்டாலும், வெறுப்புக் கொண்டாலும் அவனுடைய முகம் முற்ப்பட்டு அதைத் தெரிவிக்கும், அம் முகத்தைவிட அறிவு மிக்கது உண்டோ.

சாலமன் பாப்பையா உரை

ஒருவன் மனத்தால் விரும்பினாலும் வெறுத்தாலும் அதை வெளிக்காட்டுவதில் முந்தி நிற்கும் முகத்தைக் காட்டிலும் அறிவு மிக்கது வேறு உண்டோ?

மு. கருணாநிதி உரை

உள்ளத்தில் உள்ள விருப்பு வெறுப்புகளை முந்திக் கொண்டு வெளியிடுவதில் முகத்தைப் போல அறிவு மிக்கது வேறெதுவுமில்லை

குறிப்பறிதல் அதிகாரம் முழுவதும்