குறள்: 706 71. குறிப்பறிதல்
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்கடுத்தது காட்டும் முகம்
மு. வரதராசனார் உரை
தன்னை அடுத்தப் பொருளைத் தன்னிடம் காட்டும் பளிங்கு போல், ஒருவனுடைய நெஞ்சில் மிகுந்துள்ளதை அவனுடைய முகம் காட்டும்.
சாலமன் பாப்பையா உரை
தன் அருகே இருக்கும் பொருளின் நிறத்தைக் காட்டும் பளிங்கினைப்போல் ஒருவனது மனத்தே நிகழ்வதை அவன் முகம் காட்டும்.
மு. கருணாநிதி உரை
கண்ணாடி, தனக்கு உள்ளத்தைக் காட்டுவதுபோல ஒருவரது மனத்தில் உள்ளத்தில் அவரது முகம் காட்டி விடும்