குறள்: 742 75. அரண்

பொருட்பால்அரணியல்

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்காடும் உடைய தரண்

மு. வரதராசனார் உரை

மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உள்ளதே அரண் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை

தெளிந்த நீர், வெட்ட வெளியான நிலம், உயர்ந்த மலை, அடர்ந்த காடு என்னும் இவையே நீர் அரண், நில அரண், மலை அரண், காட்டு அரண் என இயற்கை அரண்களாகும்.

மு. கருணாநிதி உரை

ஆழமும் அகலமும் கொண்ட அகழ், பரந்த நிலம், உயர்ந்து நிற்கும் மலைத்தொடர், அடர்ந்திருக்கும் காடு ஆகியவற்றை உடையதே அரணாகும்

அரண் அதிகாரம் முழுவதும்