குறள்: 743 75. அரண்

பொருட்பால்அரணியல்

உயர்வகலந் திண்மை அருமையிந் நான்கின்அமைவரண் என்றுரைக்கும் நூல்

மு. வரதராசனார் உரை

உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க முடியாத அருமை ஆகிய இந்த நான்கும் அமைந்திப்பதே அரண் என்று நூலோர் கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை

பகைவர் ஏற முடியாத உயரம், காவலர் நிற்க இயங்க வசதியான அகலம், இடிக்கமுடியாத வலிமை, கடக்க முடியாத பொறிகளின் அருமை, இந்நான்கையும் மிகுதியாக உடைய கோட்டையையே செயற்கை அரண் என்று நூல்கள் கூறும்.

மு. கருணாநிதி உரை

உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க இயலாத அமைப்பு ஆகிய நான்கும் அமைந்திருப்பதே அரணுக்குரிய இலக்கணமாகும்

அரண் அதிகாரம் முழுவதும்