குறள்: 770 77. படை மாட்சி

பொருட்பால்படையியல்

நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானைதலைமக்கள் இல்வழி இல்

மு. வரதராசனார் உரை

நெடுங்காலமாக நிலைத்திருக்கும் வீரர் பலரை உடையதே ஆனாலும், தலைமைதாங்கும் தலைவர் இல்லாத போது படைக்குப் பெருமை இல்லையாகும்.

சாலமன் பாப்பையா உரை

சிறந்த வீரர்கள் அதிகம் இருந்தாலும், படைக்கு நல்ல தலைவன் இல்லை என்றால் அந்தப் படை போரில் நிலைத்து நிற்காது.

மு. கருணாநிதி உரை

உறுதிவாய்ந்த வீரர்களை அதிகம் உடையதாக இருந்தாலும் தலைமை தாங்கும் தலைவர்கள் இல்லாவிட்டால் அந்தப் படை நிலைத்து நிற்க முடியாது

படை மாட்சி அதிகாரம் முழுவதும்