குறள்: 761 77. படை மாட்சி
மு. வரதராசனார் உரை
எல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள வெற்றி தரும் படை, அரசனுடைய செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.
உள்நாட்டு அமைதிக்கு ஊறு நேராதவாறு தடுப்பதற்கும் வெளிநாட்டுக்கு அடிமைப்படாமல் உரிமையுடன் வாழ்வதற்கும் மிகுந்த ஆற்றல் உள்ள படை ஒர் நாட்டிற்கு இன்றியமையாததாகிறது. ஒரு நாட்டின் செல்வ வளம் சிதைவுபடாமல் இருக்க வேண்டுமானாலும், அந்நாட்டிலே போதுமான படைபலம் இருக்க வேண்டும். இவ்வாறு அமைதியையும் வளத்தையும் படை பாதுகாக்கின்றது. அப்படையின் பண்பு எப்படி இருக்கவேண்டும் என்பதை இத்தொகுதியில் விளக்கமாக உரைக்கின்றார் வள்ளுவர். உயர்ந்த நாட்டுப்பற்றுடன் கூடிய வீரம் காட்டி நாட்டின் இறையாண்மையைப் படைதான் காப்பாற்றுகிறது. எனவே படை அரசின் தலைமைச் செல்வமாம். படைமாட்சி என்பது படைவீரர்களின் மாட்சியையும் குறித்தது.
குறள்: 761 77. படை மாட்சி
எல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள வெற்றி தரும் படை, அரசனுடைய செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.
குறள்: 762 77. படை மாட்சி
போரில் அழிவு வந்தவிடத்தில் வலிமைக் குன்றினாலும், இடையூறுகளுக்கு அஞ்சாத அஞ்சாமை தொன்றுதொட்டுப் பெருமை உடையபடைக்கு அல்லாமல் முடியாது.
குறள்: 763 77. படை மாட்சி
எலியாகிய பகைக்கூடி கடல் போல் ஒலித்தாலும் என்ன தீங்கு ஏற்ப்படும், பாம்பு மூச்சு விட்ட அளவில் அவைக் கெட்டழியும்.
குறள்: 764 77. படை மாட்சி
(போர் முனையில்) அழிவு இல்லாததாய்(பகைவருடைய) வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்று தொட்டுவந்த அஞ்சாமை உடையதே படையாகும்.
குறள்: 765 77. படை மாட்சி
எமனே சினங்கொண்டு தன் மேல் எதிர்த்து வந்தாலும் ஒன்றாகத் திரண்டு எதிர்த்து நிற்க்கும் ஆற்றல் உடையதே படையாகும்.
குறள்: 766 77. படை மாட்சி
வீரம், மானம், சிறந்த வழியில் நடக்கும் நடக்கை, தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய இந்த நான்கு பண்புகளும் படைக்கு சிறந்தவையாகும்.
குறள்: 767 77. படை மாட்சி
தன் மேல் எதிர்த்து வந்த பகைவரின் போரைத்தாங்கி, வெல்லும் தன்மை அறிந்து அவனுடைய தூசிப்படையை எதிர்த்துச் செல்லவல்லதே படையாகும்.
குறள்: 768 77. படை மாட்சி
போர் செய்யும் வீரமும்( எதிர்ப்பைத் தாங்கும்) ஆற்றலுமும் இல்லையானால் படைத்தன்னுடைய அணிவகுப்பால் பெருமை பெறும்.
குறள்: 769 77. படை மாட்சி
தன் அளவு சிறிதாகத் தேய்தலும், தலைவரிடம் நீங்காத வெறுப்பும் வறுமையும் இல்லாதிருக்குமானால் அத்தகைய படை வெற்றி பெறும்.
குறள்: 770 77. படை மாட்சி
நெடுங்காலமாக நிலைத்திருக்கும் வீரர் பலரை உடையதே ஆனாலும், தலைமைதாங்கும் தலைவர் இல்லாத போது படைக்குப் பெருமை இல்லையாகும்.