குறள்: 751 76. பொருள் செயல்வகை
மு. வரதராசனார் உரை
ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும், மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருள் அல்லாமல் சிறப்புடைய பொருள் வேறு இல்லை.
பொருள் செயல்வகை என்பது செல்வம் சேர்த்தலின் திறம் எனப் பொருள்படும். பொருள் தேடுதலின் வகை, அதன் சிறப்பு அதன் பயன் கொள்ளும் முறை ஆகியன கூறப்படுகின்றன. இத்தொகுதியிலுள்ள பாடற் கருத்துக்கள் தனிமனிதர்க்கும் அரசுக்கும் பொருந்துவனவாக உள்ளன. அறநெறியில் செல்வம் ஈட்டப்பட வேண்டும் என்பது வலியுயுறுத்தப் பெறுகிறது. இவ்வதிகாரம் 'செய்க பொருளை' எனப் பணிக்கிறது. பொருள் மதிப்பு உண்டாக்குவது; சிறப்புச் செய்ய வைப்பது; பகையை வெல்லச் செய்வது; பகைவரின் செருக்கை அறுக்கவல்லது; அரசு, தன் குடிமக்கள் விரும்பிக் கொடுக்காத செல்வத்தையும் ஏற்காது கழித்து விட வேண்டும், நாட்டில் அருளாட்சி பொருளாலேயே உண்டு- இவை அதிகாரத்துள் காணப்படும் செய்திகள்; பொருள் மிகுதியாகத் தொகுப்பவர்க்கு அறவாழ்க்கையும் இன்பநிறைந்த வாழ்வும் எளிது எனவும் சொல்லப்படுகிறது.
குறள்: 751 76. பொருள் செயல்வகை
ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும், மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருள் அல்லாமல் சிறப்புடைய பொருள் வேறு இல்லை.
குறள்: 752 76. பொருள் செயல்வகை
பொருள் இல்லாதவரை (வேறு நன்மை உடையவராக இருந்தாலும்) எல்லாரும் இகழ்வார், செல்வரை (வேறு நன்மை இல்லாவிட்டாலும்) எல்லாரும் சிறப்பு செய்வர்.
குறள்: 753 76. பொருள் செயல்வகை
பொருள் என்று சொல்லப்படுகின்ற நந்தா விளக்கு, நினைத்த இடத்திற்குச் சென்று உள்ள இடையூற்றைக் கெடுக்கும்
குறள்: 754 76. பொருள் செயல்வகை
சேர்க்கும் திறம் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல், சேர்க்கப் பட்டுவந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையும் கொடுக்கும்.
குறள்: 755 76. பொருள் செயல்வகை
அருளோடும், அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தின் ஆக்கத்தைப் பெற்று மகிழாமல் அதைத் தீமையானது என்று நீக்கிவிட வேண்டும்.
குறள்: 756 76. பொருள் செயல்வகை
இறையாக வந்து சேரும் பொருளும், சுங்கமாகக் கொள்ளும் பொருளும், தன் பகைவரை வென்று திறமையாகக் கொள்ளும் பொருளும் அரசனுடைய பொருள்களாகும்.
குறள்: 757 76. பொருள் செயல்வகை
அன்பினால் பெறப்பட்ட அருள் என்றுக் கூறப்படும் குழந்தை, பொருள் என்றுக் கூறப்படும் செல்வமுள்ள செவிலித் தாயால் வளர்வதாகும்.
குறள்: 758 76. பொருள் செயல்வகை
தன் கைப்பொருள் ஒன்று தன்னிடம் இருக்க அதைக் கொண்டு ஒருவன் செயல் செய்தால், மலையின் மேல் ஏறி யானைப் போரைக் கண்டாற் போன்றது.
குறள்: 759 76. பொருள் செயல்வகை
ஒருவன் பொருளை ஈட்டவேண்டும், அவனுடைய பகைவரின் செருக்கைக் கெடுக்க வல்ல வாள் அதைவிடக் கூர்மையானது வேறு இல்லை.
குறள்: 760 76. பொருள் செயல்வகை
சிறந்ததாகிய பொருளை மிகுதியாக ஈட்டியவர்க்கு, மற்ற அறமும் இன்பமுமாகிய இரண்டும் ஒரு சேரக்கைகூடும் எளிய பொருளாகும்.