குறள்: 757 76. பொருள் செயல்வகை

பொருட்பால்கூழியல்

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்செல்வச் செவிலியால் உண்டு

மு. வரதராசனார் உரை

அன்பினால் பெறப்பட்ட அருள் என்றுக் கூறப்படும் குழந்தை, பொருள் என்றுக் கூறப்படும் செல்வமுள்ள செவிலித் தாயால் வளர்வதாகும்.

சாலமன் பாப்பையா உரை

அன்பு பெற்றெடுத்த அருள் என்னும் குழந்தை, பொருள் எனப்படும் இன்பம் தரும் வளர்ப்புத் தாயால் வளரும்.

மு. கருணாநிதி உரை

அன்பு என்கிற அன்னை பெற்றெடுக்கும் அருள் என்கிற குழந்தை, பொருள் என்கிற செவிலித் தாயால் வளரக் கூடியதாகும்

பொருள் செயல்வகை அதிகாரம் முழுவதும்