குறள்: 758 76. பொருள் செயல்வகை

பொருட்பால்கூழியல்

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்றுண்டாகச் செய்வான் வினை

மு. வரதராசனார் உரை

தன் கைப்பொருள் ஒன்று தன்னிடம் இருக்க அதைக் கொண்டு ஒருவன் செயல் செய்தால், மலையின் மேல் ஏறி யானைப் போரைக் கண்டாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை

தன் கையிலே பணம் இருக்க ஒரு செயலைச் செய்யத் தொடங்குவது, ஒருவன் மலை மேல் ஏறி நின்று யானைச் சண்டையைக் கண்டது போலாம்.

மு. கருணாநிதி உரை

தன் கைப்பொருளைக்கொண்டு ஒரு தொழில் செய்வது என்பது யானைகள் ஒன்றோடொன்று போரிடும் போது இடையில் சிக்கிக் கொள்ளாமல் அந்தப் போரை ஒரு குன்றின் மீது நின்று காண்பதைப் போன்று இலகுவானது

பொருள் செயல்வகை அதிகாரம் முழுவதும்