குறள்: 764 77. படை மாட்சி

பொருட்பால்படையியல்

அழிவின் றறைபோகா தாகி வழிவந்தவன்க ணதுவே படை

மு. வரதராசனார் உரை

(போர் முனையில்) அழிவு இல்லாததாய்(பகைவருடைய) வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்று தொட்டுவந்த அஞ்சாமை உடையதே படையாகும்.

சாலமன் பாப்பையா உரை

போரில் தோற்காமலும், பகைவரின் சதிக்குத் துணை போகாமலும், தொன்று தொட்டு வரும் வீரத்தை உடையதே படை.

மு. கருணாநிதி உரை

எந்த நிலையிலும் அழியாததும், சூழ்ச்சிக்கு இரையாகததும், பரம்பரையாகவே பயமற்ற உறுதி உடையதும்தான் உண்மையான படை எனப்படும்

படை மாட்சி அதிகாரம் முழுவதும்