குறள்: 765 77. படை மாட்சி

பொருட்பால்படையியல்

கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்ஆற்ற லதுவே படை

மு. வரதராசனார் உரை

எமனே சினங்கொண்டு தன் மேல் எதிர்த்து வந்தாலும் ஒன்றாகத் திரண்டு எதிர்த்து நிற்க்கும் ஆற்றல் உடையதே படையாகும்.

சாலமன் பாப்பையா உரை

எமனே எதிர்த்து வந்தாலும், கூடி நின்று எதிர்த்துச் சண்டை இடும் ஆற்றலை உடையதே படை.

மு. கருணாநிதி உரை

உயிரைப் பறிக்கும் சாவு எதிர்கொண்டு வந்தாலும் அஞ்சாமல் ஒன்றுபட்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதற்கே படை என்ற பெயர் பொருந்தும்

படை மாட்சி அதிகாரம் முழுவதும்