குறள்: 781 79. நட்பு

பொருட்பால்நட்பியல்

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்வினைக்கரிய யாவுள காப்பு

மு. வரதராசனார் உரை

நட்பைப்போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன, அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன.

சாலமன் பாப்பையா உரை

சம்பாதிப்பதற்கு நட்பைப் போல அரிய பொருள் வேறு எவை உண்டு? அதைச் சம்பாதித்து விட்டால் பிறர் புக முடியாதபடி நம்மைக் காப்பதற்கு அரிய பொருள் வேறு எவை உண்டு?

மு. கருணாநிதி உரை

நட்புக் கொள்வது போன்ற அரிய செயல் இல்லை அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை

நட்பு அதிகாரம் முழுவதும்