குறள்: 797 80. நட்பாராய்தல்

பொருட்பால்நட்பியல்

ஊதியம் என்ப தொருவற்குப் பேதையார்கேண்மை ஒரீஇ விடல்

மு. வரதராசனார் உரை

ஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவறுடன் செய்து கொண்ட நட்பிலிருந்து நீங்கி அவரைக் கைவிடுதலாகும்.

சாலமன் பாப்பையா உரை

அறிவில்லாதவரோடு கொண்ட நட்பை விட்டு விடுவது, ஒருவனுக்கு இலாபம்.

மு. கருணாநிதி உரை

ஒருவருக்குக் கிடைத்த நற்பயன் என்பது அவர் அறிவில்லாத ஒருவருடன் கொண்டிருந்த நட்பைத் துறந்து விடுவதேயாகும்

நட்பாராய்தல் அதிகாரம் முழுவதும்