குறள்: 791 80. நட்பாராய்தல்
மு. வரதராசனார் உரை
நட்புச் செய்தபிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை, ஆகையால் ஆராயாமல் நட்புச் செய்வது போல் கெடுதியானது வேறு இல்லை.
நட்பு ஆராய்தலாவது நட்பாவாரை ஆராய்ந்து அறிதலாம். நட்புத்தொடர்பு மனித வாழ்வில் இன்றியமையாதது. சில நட்புறவுகள் தாமே தேடிச்சென்று கொள்வன, சில தம்மை நாடி வருவன. இப்பாடல் தொகுப்பு நன்கு ஆராய்ந்த பிறகே நட்புறவை ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதையும் ஆராயும் திறனையும் விளக்கிக் கூறுவதாம், நன்கு ஆய்ந்து நட்புச் செய்யவேண்டும் என்பதை வலியுறுத்த 'ஆய்ந்தாய்ந்து' என அழுந்தச் சொல்லியுள்ளார் வள்ளுவர்.
குறள்: 791 80. நட்பாராய்தல்
நட்புச் செய்தபிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை, ஆகையால் ஆராயாமல் நட்புச் செய்வது போல் கெடுதியானது வேறு இல்லை.
குறள்: 792 80. நட்பாராய்தல்
ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில் தான் சாவதற்க்குக் காரணமானத் துயரத்தை உண்டாக்கிவிடும்.
குறள்: 793 80. நட்பாராய்தல்
ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும் குற்றத்தையும் குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனேடு நட்புக் கொள்ள வேண்டும்.
குறள்: 794 80. நட்பாராய்தல்
உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வருகின்றப் பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்பு கொள்ளவேண்டும்.
குறள்: 795 80. நட்பாராய்தல்
நன்மை இல்லாதச் சொற்களைக் கண்டபோது வருந்தும்படியாக இடிந்துச் சொல்லி, உலகநடையை அறிய வல்லவரின் நட்பை ஆராய்ப்து கொள்ள வேண்டும்.
குறள்: 796 80. நட்பாராய்தல்
கேடு வந்த போதும் ஒருவகை நன்மை உண்டு, அக் கேடு ஒருவனுடைய நண்பரின் இயல்புகளை நீட்டிஅளந்து பார்ப்பதொரு கோலாகும்.
குறள்: 797 80. நட்பாராய்தல்
ஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவறுடன் செய்து கொண்ட நட்பிலிருந்து நீங்கி அவரைக் கைவிடுதலாகும்.
குறள்: 798 80. நட்பாராய்தல்
ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை எண்ணாமலிருக்க வேண்டும், அதுபோல் துன்பம் வந்த போது கைவிடுகின்றவரின் நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும்.
குறள்: 799 80. நட்பாராய்தல்
கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு, எமன் கொல்லும் காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும்.
குறள்: 800 80. நட்பாராய்தல்
குற்றமற்றவருடைய நட்பைக் கொள்ள வேண்டும், ஒத்தபண்பை இல்லாதவறுடைய நட்பை ஒன்றைக் கொடுத்தாவது கைவிட வேண்டும்.