குறள்: 800 80. நட்பாராய்தல்

பொருட்பால்நட்பியல்

மருவுக மாசற்றார் கேண்மையொன் றீத்துமஒருவுக ஒப்பிலார் நட்பு

மு. வரதராசனார் உரை

குற்றமற்றவருடைய நட்பைக் கொள்ள வேண்டும், ஒத்தபண்பை இல்லாதவறுடைய நட்பை ஒன்றைக் கொடுத்தாவது கைவிட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

குற்றம் அற்றவரோடு நட்புக் கொள்க; உலகோடு ஒத்து வராதவரின் நட்பை விலை கொடுத்தாவது விட்டு விடுக.

மு. கருணாநிதி உரை

மனத்தில் மாசு இல்லாதவர்களையே நண்பர்களாகப் பெற வேண்டும் மாசு உள்ளவர்களின் நட்பை, விலை கொடுத்தாவது விலக்கிட வேண்டும்

நட்பாராய்தல் அதிகாரம் முழுவதும்