குறள்: 822 83. கூடா நட்பு

பொருட்பால்நட்பியல்

இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர்மனம்போல வேறு படும்

மு. வரதராசனார் உரை

இனம் போலவே இருந்து உண்மையில் இனம் அல்லாதவரின் நட்பு, பொதுமகளிரின் மனம் போல உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும்.

சாலமன் பாப்பையா உரை

வேண்டியவர் போலத் தோன்றி, மனத்தால் வேண்டாதவராக இருப்பவரோடு உண்டான நட்பு பாலியல் தொழிலாளர் மனம் போல வேறுபடும்.

மு. கருணாநிதி உரை

உற்றாராக இல்லாமல் உற்றார்போல நடிப்பவர்களின் நட்பு, மகளிருக்குரிய நற்பண்பு இல்லாமல் அப்பண்பு உள்ளவர் போல நடிக்கும் விலை மகளிரின் மனம்போல உள்ளொன்றும் புறமொன்றுமாக இருக்கும்

கூடா நட்பு அதிகாரம் முழுவதும்