குறள்: 823 83. கூடா நட்பு

பொருட்பால்நட்பியல்

பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்ஆகுதல் மாணார்க் கரிது

மு. வரதராசனார் உரை

பல நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்த போதிலும், அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராகப் பழகுதல், (உள்ளன்பினால்) மாட்சியடையாதவர்க்கு இல்லை.

சாலமன் பாப்பையா உரை

மனத்தால் பொருந்தாதவர்கள் நல்ல பல நூல்களைக் கற்றபோதும் மனந்திருந்தி நல்ல நண்பர் ஆவது அரிது.

மு. கருணாநிதி உரை

அரிய நூல்கள் பலவற்றைக் கற்றிருந்த போதிலும், பகையுணர்வு படைத்தோர் மனம் திருந்தி நடப்பதென்பது அரிதான காரியமாகும்

கூடா நட்பு அதிகாரம் முழுவதும்