குறள்: 831 84. பேதைமை

பொருட்பால்நட்பியல்

பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண்டூதியம் போக விடல்

மு. வரதராசனார் உரை

பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை கைவிடுதலாகும்.

சாலமன் பாப்பையா உரை

அறியாமை என்பது என்ன என்றால், அது ஒருவன் தனக்குத் தீமை தருவதை ஏற்றுக் கொண்டு, இலாபத்தை விட்டு விடுவதே ஆம்.

மு. கருணாநிதி உரை

கேடு விளைவிப்பது எது? நன்மை தருவது எது? என்று தெளிவடையாமல் நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே பேதைமை என்பதற்கான எடுத்துக்காட்டாகும்

பேதைமை அதிகாரம் முழுவதும்