குறள்: 832 84. பேதைமை

பொருட்பால்நட்பியல்

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மைகையல்ல தன்கண் செயல்

மு. வரதராசனார் உரை

ஒருவனுக்கு பேதைமை எல்லாவற்றிலும் மிக்க பேதைமை, தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் தன் விருப்பத்தை செலுத்துதல் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை

அறியாமையுள் எல்லாம் அறியாமை என்பது, ஒருவன் தனக்கு நன்மை தராதவை மேல் எல்லாம், விருப்பம் கொள்வதே ஆகும்.

மு. கருணாநிதி உரை

தன்னால் இயலாத செயல்களை விரும்பி, அவற்றில் தலையிடுவது, என்பது பேதைமைகளில் எல்லாம் மிகப்பெரிய பேதைமையாகும்

பேதைமை அதிகாரம் முழுவதும்