குறள்: 835 84. பேதைமை

பொருட்பால்நட்பியல்

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்தான்புக் கழுந்தும் அளறு

மு. வரதராசனார் உரை

எழுப்பிறப்பிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தைப் பேதைத் தன் ஒருபிறவியில் செய்து கொள்ள வல்லவனாவான்.

சாலமன் பாப்பையா உரை

அறிவற்றவன் தான் பிறந்த ஒரு பிறவியிலேயே, அடுத்து வரும் பிறவிகள்தோறும் தான் புகுந்து வருந்தி அனுபவிக்கும் நரகத்தைப் படைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையவன் ஆவான்.

மு. கருணாநிதி உரை

தன்னிச்சையாகச் செயல்படும் பேதை, எக்காலத்திலும் துன்பமெனும் சகதியில் அழுந்திக் கிடக்க நேரிடும்

பேதைமை அதிகாரம் முழுவதும்