குறள்: 836 84. பேதைமை

பொருட்பால்நட்பியல்

பொய்படும் ஒள்றோ புனைபூணும் கையறியாப்பேதை வினைமேற் கொளின்

மு. வரதராசனார் உரை

ஒழுக்க நெறி அறியத பேதை ஒருச் செயலை மேற்கொண்டால் (அந்த செயல் முடிவுபெறாமல்) பொய்படும், அன்றியும் அவன் குற்றவாளியாகித் தளை பூணுவான்.

சாலமன் பாப்பையா உரை

செய்யும் வழி தெரியாத அறிவற்றவன் ஒரு செயலைச் செய்யத் தொடங்கினால் செயலும் கெட்டு, அவனும் கெட்டுப் போவான்.

மு. கருணாநிதி உரை

நேர்மை வழி அறியாத மூடர், மேற்கொண்ட செயலைத் தொடர முடியாமல், அதனால் அச்செயலும் கெட்டுத் தம்மையும் தண்டித்துக் கொள்வர்

பேதைமை அதிகாரம் முழுவதும்