குறள்: 857 86. இகல்
மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்இன்னா அறிவி னவர்
மு. வரதராசனார் உரை
இகலை விரும்புகின்ற தீய அறிவை உடையவர் வெற்றி பொருந்துதலுக்குக் காரணமான உண்மைப் பொருளை அறியமாட்டார்.
சாலமன் பாப்பையா உரை
மனவேறுபாட்டோடு கேடான அறிவையும் உடையவர், வெற்றி தரும் நீதிநூற் பொருளை அறியமாட்டார்.
மு. கருணாநிதி உரை
பகை உணர்வு கொள்ளும் தீய அறிவுடையவர்கள் வெற்றிக்கு வழிகாட்டும் உண்மைப் பொருளை அறியமாட்டார்கள்