குறள்: 858 86. இகல்

பொருட்பால்நட்பியல்

இகலிற் கெதிர்சாய்தல் ஆக்கம் அதனைமிகலூக்கின் ஊக்குமாங் கேடு

மு. வரதராசனார் உரை

இகலுக்கு எதிரே சாய்ந்து நடத்தல் ஒருவனுக்கு ஆக்கமாகும், அதனை எதிர்த்து வெல்லக்கருதினால் கேடு அவனிடம் வரக் கருதும்.

சாலமன் பாப்பையா உரை

மனவேறுபாடு தோன்றும்போது அதை வரவேற்காமல் இருப்பது ஒருவனுக்குச் செல்வமாகும்; வரவேற்பது கேட்டையே வரவேற்ப‌தாகும்.

மு. கருணாநிதி உரை

மனத்தில் தோன்றும் மாறுபாட்டை எதிர்கொண்டு நீக்கிக் கொண்டால் நன்மையும், அதற்கு மாறாக அதனை மிகுதியாக ஊக்கப்படுத்தி வளர்த்துக் கொண்டால் தீமையும் விளையும்

இகல் அதிகாரம் முழுவதும்