குறள்: 865 87. பகை மாட்சி

பொருட்பால்நட்பியல்

வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்பண்பிலன் பற்றார்க் கினிது

மு. வரதராசனார் உரை

ஒருவன் நல்வழியை நோக்காமல் பொருத்தமானவற்றைச் செய்யாமல், பழியையும் பார்க்காமல், நற்பண்பும் இல்லாமல் இருந்தால் அவன் பகைவர்க்கும் எளியனவான்.

சாலமன் பாப்பையா உரை

நீதி நூல்கள் ‌சொல்லும் வழியைப் படித்து அறியாத, நல்லனவற்றைச் செய்யாத, அவை தெரியாமலே செயலாற்றுவதால் வரும் வழியையும் எண்ணாத, நல்ல பண்புகளும் இல்லாத அரசின் பகைமை, பகைவர்க்கு இனிது.

மு. கருணாநிதி உரை

நல்வழி நாடாமல், பொருத்தமானதைச் செய்யாமல், பழிக்கு அஞ்சாமல், பண்பும் இல்லாமல் ஒருவன் இருந்தால் அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்

பகை மாட்சி அதிகாரம் முழுவதும்