குறள்: 866 87. பகை மாட்சி

பொருட்பால்நட்பியல்

காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்பேணாமை பேணப் படும்

மு. வரதராசனார் உரை

ஒருவன் உண்மை காணாத சினம் உடையவனாய், மிகப் பெரிய ஆசை உடையவனாய் இருந்தால் அவனுடைய பகை விரும்பி மேற்கொள்ளப்படும்.

சாலமன் பாப்பையா உரை

நன்மை தீமை, வேண்டியவர் வேண்டாதார் என்றெல்லாம் எண்ணாது, கோபம் மிக்க, மேலும் மேலும் பெருகும் பெண்ணாசையை உடைய அரசின் பகைமை, பிறரால் விரும்ப்படும்.

மு. கருணாநிதி உரை

சிந்திக்காமலே சினம் கொள்பனாகவும், பேராசைக்காரனாகவும் இருப்பவனின் பகையை ஏற்று எதிர் கொள்ளலாம்

பகை மாட்சி அதிகாரம் முழுவதும்