குறள்: 871 88. பகைத்திறம் தெரிதல்

பொருட்பால்நட்பியல்

பகையென்னும் பண்பி லதனை ஒருவன்நகையேயும் வேண்டற்பாற் றன்று

மு. வரதராசனார் உரை

பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிறிதும் பொழுது போக்கும் விளையாட்டாகவும் விரும்புதலாகாது.

சாலமன் பாப்பையா உரை

பகை எனப்படும் பண்பற்ற ஒன்று, விளையாட்டிலும் கூட் விரும்பத்தக்கது அன்று.

மு. கருணாநிதி உரை

பகை உணர்வு என்பது பண்புக்கு மாறுபாடானது என்பதால் அதனை வேடிக்கை விளையாட்டாகக்கூட ஒருவன் கொள்ளக்கூடாது

பகைத்திறம் தெரிதல் அதிகாரம் முழுவதும்