குறள்: 871 88. பகைத்திறம் தெரிதல்
மு. வரதராசனார் உரை
பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிறிதும் பொழுது போக்கும் விளையாட்டாகவும் விரும்புதலாகாது.
பகை மாட்சி அதிகாரத்தில் பகைவராக ஏற்றுக்கொள்ள வேண்டியவர் யார் எனக் கூறப்பட்டது. பகைவரை அறியவேண்டிய முறைபற்றி இங்கே சொல்லப்படுகிறது. பகையே இல்லாதிருப்பதே நல்லது என ஒரு பாடல் சொல்கிறது. பகையை நட்பாக்கிக் கொள்பவரை உயர்த்திப் பேசுகிறது மற்றொரு குறள். பகைத்திறம் தெரிந்து தமக்கு வாய்ப்ப எண்ணிச் செய்ய வேண்டும், பகைவர்களின் நிலைமையை ஆராய்ந்து அறியவேண்டும், பகையாயுள்ளாரில் வெல்லற்குரியார் அல்லாதார் நிலைமையை அறிதல்வேண்டும் எனவும் கூறுகிறது இவ்வதிகாரம்.
குறள்: 871 88. பகைத்திறம் தெரிதல்
பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிறிதும் பொழுது போக்கும் விளையாட்டாகவும் விரும்புதலாகாது.
குறள்: 872 88. பகைத்திறம் தெரிதல்
வில்லை ஏராக உடைய உழவராகிய வீரருடன் பகை கொண்ட போதிலும், சொல்லை ஏராக உடைய உழவராகிய அறிஞருடன் பகை கொள்ளக் கூடாது.
குறள்: 873 88. பகைத்திறம் தெரிதல்
தான் தனியாக இருந்து பலருடைய பகையைத் தேடிக் கொள்பவன், பித்துப் பிடித்தாரை விட அறிவில்லாதவனாகக் கருதப்படுவான்.
குறள்: 874 88. பகைத்திறம் தெரிதல்
பகையையும் நட்பாக செய்து கொண்டு நடக்கும், பண்புடையவனது பெருந்தன்மையில் உலகம் தங்கியிருப்பதாகும்.
குறள்: 875 88. பகைத்திறம் தெரிதல்
தனக்கு உதவியான துணையே இல்லை, பகையே இரண்டு, தானே ஒருவன் இந் நிலையில் அப் பகைகளில் ஒன்றை இனியத் துணையாகக் கொள்ள வேண்டும்.
குறள்: 876 88. பகைத்திறம் தெரிதல்
இதற்கு முன் ஒருவனைப் பற்றி ஆராய்ந்து தெளிந்திருந்தாலும், தெளியாவிட்டாலும் அழிவு வந்த காலத்தில் அவனைத் தெளியாமலும் நீங்காமலும் வாளாவிட வேண்டும்.
குறள்: 877 88. பகைத்திறம் தெரிதல்
துன்புற்றதைத் தாமாகவே அறியாத நண்பர்க்குத் துன்பத்தைச் சொல்லக் கூடாது, பகைவரிடத்தில் மென்மை மேற்கொள்ளக் கூடாது.
குறள்: 878 88. பகைத்திறம் தெரிதல்
செய்யும் வகையை அறிந்து தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு தற்காப்புத் தேடிக் கொண்டால், பகைவரிடத்தில் ஏற்பட்ட செருக்குத் தானாவே அழியும்.
குறள்: 879 88. பகைத்திறம் தெரிதல்
முள் மரத்தை இளையதாக இருக்கும் போதே வெட்ட வேண்டும், காழ்ப்பு ஏறி முதிர்ந்த போது வெட்டுகின்றவரின் கையை அது வருத்தும்.
குறள்: 880 88. பகைத்திறம் தெரிதல்
பகைத்தவருடையத் தலைமையைக் கொடுக்க முடியாதவர் திண்ணமாக மூச்சு விடும் அளவிற்கும் உயிரோடு வாழ்கின்றவர் அல்லர்.